உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுகமாக நிதியுதவி செய்து வருவதாக அமெரிக்கா கடும் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் எண்ணெய் மற்றும் ராணுவ உபகரணங்களை வாங்குவது தான் இந்த நிதியுதவிக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது 25% வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் இத்தகைய கருத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
டிரம்ப் அரசாங்கம் வைத்துள்ள இந்த வரி ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் அமலில் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.