புதுப்பிக்கவல்ல எரிசக்தி வளர்ச்சிக்கான ஐந்தாண்டு திட்டம் சீனா வெளியீடு

Estimated read time 0 min read

15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி வளர்ச்சிக்கான திட்டத்தை சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையமும் தேசிய எரிசக்தி நிர்வாகமும் அண்மையில் கூட்டாக வெளியிட்டன.

இக்காலக்கட்டத்தில் சீனாவின் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறை, அளவு விரிவாக்கம், தர உயர்வு மற்றும் நம்பகமான மாற்றீடு ஆகியவற்றை சிறப்பம்சங்களாகக் கொண்டிருக்கும் புதிய கட்டத்தை அடையும் என்று இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2030ஆம் ஆண்டு வரை புதுப்பிக்கவல்ல எரிசக்தியின் மொத்த நுகர்வு, சுமார் 180 கோடி டன் எடையுள்ள தர நிர்ணய நிலக்கரிக்குச் சமமாக இருக்கும் என்றும், புதுப்பில்லவல்ல எரிசக்தி சாதனங்களின் மொத்த மின் உற்பத்தி திறன் 350 கோடி கிலோவாட்டை எட்டும் என்றும், காற்று மற்றும் சூரிய ஆற்றலின் ஒருங்கிணைந்த மின் உற்பத்தித் திறன் 280 கோடி கிலோவாட்டைத் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author