1898இல் வெப்பநிலை பதிவு செய்தல் தொடங்கியதில் இருந்து, கடந்த அக்டோபர் மாதத்தில், ஜப்பான் உச்சபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் (ஜேஎம்ஏ) தரவு காட்டுகிறது.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) வெளியிடப்பட்ட ஜேஎம்ஏ தரவுகளின்படி, ஜப்பான் முழுவதும் மாதாந்திர சராசரி வெப்பநிலை வழக்கமான அக்டோபர் வெப்பநிலையை விட 2.21 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது.
பிராந்திய ரீதியாக, வடக்கு ஜப்பானில் வெப்பநிலை சராசரியாக 1.9 டிகிரி அதிகமாக உள்ளது.
அதே நேரத்தில் கிழக்கு மற்றும் மேற்கு ஜப்பானில் வெப்பநிலை 2.6 டிகிரி அதிகரித்துள்ளது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.