சீனா சொந்தமாகத் தயாரித்த முதலாவது பெரிய ரக சொசுகு கப்பலான அடோரா மேஜிக் சிட்டி(Adora Magic City) ஜனவரி முதல் நாள் ஷாங்காய்யிலிருந்து புறப்பட்டு, வணிக ரீதியான முதல் பயணத்தைத் தொடங்கியது.
சீனாவின் கப்பல் கட்டுமானத் தொழிலில் மைல் கல் சாதனையை எட்டியுள்ள இக்கப்பலானது, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் தனது புத்தாண்டு வாழ்த்துரையில் குறிப்பிட்ட சீனாவின் புத்தாக்கத்துக்கான இயக்காற்றல் மற்றும் வளர்ச்சிக்கான உயிராற்றலை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த ஓராண்டில் பல இன்னல்கள் நிலவிய போதிலும், சீனர்கள் ஒவ்வொருவரும் முயற்சியுடன் அசாதாரண பங்குகளை ஆற்றியதோடு, பல சாதனைகளையும் பெற்றுள்ளனர்.
புத்தாண்டு மணி ஒலிக்கும் போது, உலகளவில் நெருக்கடி, போர், தாக்குதல், போன்றவை இன்னும் நீங்கவில்லை.
இது குறித்து சீனா வருத்தம் அடைந்துள்ளது. இந்நிலையில், மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் மக்களின் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற ஷி ச்சின்பிங்கின் கூற்று, சீன மக்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கும் ஆறுதல் மற்றும் நம்பிக்கையை வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு, அமைதி, வளர்ச்சி, நாகரிகப் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு சீனா பாடுபட்டு வந்துள்ளது. மாறி வரும் உலகில், அமைதியான வளர்ச்சி என்பது எப்போதுமே முதன்மை கருப்பொருளாகும், ஒத்துழைப்புடன் கூடிய கூட்டு வெற்றி என்பது உண்மையான கோட்பாடாகும் என்று சீனா நன்கு அறிந்து கொண்டுள்ளது.
புதிய துவக்கப் புள்ளியில், சொந்த வளர்ச்சியை மட்டுமல்ல, முழு உலகையும் சீனா கருத்தில் கொண்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து சவால்களைச் சமாளித்து கூட்டு செழுமையை முன்னேற்ற சீனா விரும்புகிறது.