உலகளாவிய நிர்வாக முறைமை, புதிய ஆண்டில் முன்பு கண்டிராத பாதிப்பைச் சந்தித்துள்ளது. இம்முறைமையிலுள்ள பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இது குறித்து சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனம், அண்மையில் பொது கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் உலகின் 52 நாடுகளைச் சேர்ந்த 31 ஆயிரம் பேர் பங்கெடுத்தனர்.
இந்த கருத்துக் கணிப்பின்படி, தற்போதைய உலக நிர்வாக முறைமைக்குச் சீர்திருத்தம் தேவை என்று கருதப்படுகிறது. வளர்ந்த நாடுகள் தலைமையிலுள்ள உலகளாவிய நிர்வாக முறைமை, பயன் இழந்துள்ளது என்று 70.6 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகக் கருத்தை, வளரும் நாடுகளைச் சேர்ந்த 74.8 விழுக்காட்டினர் ஏற்றுக்கொண்டனர். உலகளாவிய நிர்வாக முறைமையின் செயல் பயனை பல்வேறு நாடுகள் வலுப்படுத்தி, ஒத்துழைப்பை விரிவாக்கி, உலக வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்று 86.9 விழுக்காட்டினர் குறிப்பிட்டுள்ளனர்.
