நவம்பர் திங்களில் ஏபெக் தொழிற்துறை மற்றும் வணிகத் தலைவர்களின் உச்சிமாநாடு

2026ஆம் ஆண்டுக்கான ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தொழிற்துறை மற்றும் வணிகத் தலைவர்களின் உச்சிமாநாடு நவம்பர் திங்கள் 17,18 ஆகிய நாட்களில் சீனாவின் ஷெச்சென் நகரில் நடைபெறவுள்ளது.

செழுமையைக் கூட்டாக முன்னேற்றி, எதிர்கால வெற்றியைப் பெறுவோம் என்ற கருப்பொருளுடன் நடத்தப்படும் இம்மாநாட்டில், ஏபெக் உறுப்பு நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து சுமார் 1000 பேர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் ஆசிய-பசிபிக் தடையற்ற வர்த்தக மண்டலங்களின் கட்டுமானம், பிணைப்பு, செயற்கை நுண்ணறிவு, தொடரவல்ல வளர்ச்சி ஆகியவை விவாதிக்கப்படும்.

You May Also Like

More From Author