இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி இந்திய ஏற்றுமதியாளர்களை பெரிதும் பாதித்துள்ள நிலையில், மத்திய அரசு துணை நிற்கும் என்றும், விரைவில் நல்ல செய்தி எதிர்பார்க்கலாம் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசுகையிலே, இந்த வரி விவகாரம் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கம் அளித்தார்.
“மத்திய அரசின் சார்பில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்பவர்களுடன் நான் நேரடியாக பேசியுள்ளேன். டெல்லியிலும் அவர்கள் என்னை சந்தித்தனர். ஏற்கனவே கோவிட் காலத்திலும், தொழிலாளர்களும், தொழில்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக திட்டங்களை செயல்படுத்தியதை போலவே, தற்போது ஏற்பட்டுள்ள வரி பிரச்சினையிலும் அரசு முழுமையாக செயல்படுகிறது” என்றார் அவர்.
அமெரிக்க வரி விதிப்பு குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வரும்:நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
