சீனத் துணை அரசுத் தலைவர் ஹான் ஜெங் 15ஆம் நாள் 13வது பெய்ஜிங் சியாங்ஷன் மன்றக்கூட்டத்தின் வரவேற்பு விருந்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், உலகளவில் ஏற்பட்ட கால மாற்றங்களை எதிர்கொண்டுள்ள போது, மனிதகுலத்துக்கான பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவதையும் நான்கு உலகளாவிய முன்மொழிவுகளையும் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்து, மனிதகுலத்தின் பொது பிரச்சினையைச் சமாளிப்பதற்கான வழிக்காடலை வழங்கியுள்ளார் என்று குறிப்பிட்டார்.
மேலும், பொறுப்புமிக்க நாடாகவும் மிகப்பெரிய வளரும் நாடாகவும் திகழும் சீனா எப்போதுமே சீனப் பாணியுடைய நவீனமயமாக்கலின் மூலம், உலக அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சி, செழிப்பு ஆகியவற்றிற்கு பங்களித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
நடப்பு மன்றக்கூட்டத்தில் பங்கேற்கும் சுமார் 100 நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் இந்த விருந்தில் கலந்துகொண்டனர்.
