ஜப்பானின் 2026 பாதுகாப்பு வெள்ளை அறிக்கை குறித்து சீனா கருத்து

ஜப்பான் அரசின் 2026ஆம் ஆண்டு பாதுகாப்பு வெள்ளை அறிக்கை குறித்து, சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சென் சி 4ஆம் நாள் கூறுகையில்,

ஜப்பானின் புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கையில் தவறான கூற்றுகளால் நிறைந்துள்ளதோடு, அண்டை பிரதேசங்களில் நிலவும் பாதுகாப்பு நெருக்கடிகள், கூறப்படும் ‘சீனா அச்சுறுத்தல்’ ஆகியவை மிகைப்படுத்தப்பட்டுள்ளன என்றார். ஜப்பான் தனது இராணுவ கட்டுப்பாடுகளை தளர்ப்பதற்கான சாக்குப்போக்கு இதுவாகும் என்றும், இதற்கு சீனா கடும் மனநிறைவின்மையையும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தீவிரமடைந்து வரும் ஜப்பானின் புதிய ரக இராணுவவாதம், போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கிற்கான கடுமையான சவாலாகவும், பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான உண்மையான அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும், தைவான் பிரச்சினை சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டையும், சீனா-ஜப்பான் உறவின் அரசியல் அடித்தளத்தையும் தொடர்பானது என்றும், ஜப்பான் தனது ஆக்கிரமிப்பு வரலாற்றை ஆழமாக மீளாய்வு செய்து, சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துமாறு சீனா வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author