இவ்வாண்டு ஐ.நா நிறுவப்பட்ட 80ஆவது ஆண்டு நிறைவாகும். ஐ.நா விவகாரங்களில் சீனா எப்போதுமே ஆக்கமுடன் பங்கெற்று வருகிறது.
தற்போது, உலகளாவிய தெற்கு நாடுகளின் தலைமை நாடாகவும், உலக வளர்ச்சி லட்சியத்துக்கு முக்கிய பங்காற்றி வருகின்ற நாடாகவும் சீனா கருதப்படுகிறது.
திட்ட சேவைகளுக்கான ஐ.நா அலுவலகத்தின் செயல் தலைவர் ஜார்ஜ் மொரேரா டா சில்வா அண்மையில் சீன ஊடகக் குழுத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், பலதரப்புவாதத்துக்கான சீனாவின் ஆதரவு மிகவும் முக்கியமானது. தற்போது, உலக ஒத்துழைப்பு அமைப்புமுறையை வலுப்படுத்த வேண்டும். இந்த நிலையில், சீனா முக்கிய பங்காற்றியுள்ளது என்றார்.
சீனாவுடனான ஒத்துழைப்பு குறித்து அவர் கூறுகையில், பல ஆண்டுகளாக, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல பிரதேங்களிலுள்ள வளரும் நாடுகளுக்கு சீனா ஆக்கமுடன் ஆதரவு அளித்து வருகிறது.
உலக வளர்ச்சி முன்மொழிவு என்றாலும் சரி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டு கட்டுமானம் என்றாலும் சரி, வளரும் நாடுகளுடன் சீனா கூட்டாளி உறவை ஆழமாக்கி, கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவதை வெளிப்படுத்தியுள்ளன.
அத்துடன், வளரும் நாடுகள், பலதரப்பு வளர்ச்சி வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, வளரும் நாடுகளின் உள் கட்டமைப்புக்குப் பெரிதும் ஆதரவு அளித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்துக்கான சமாளிப்பு குறித்து, அவர் கூறுகையில், வளர்ச்சி ஒத்துழைப்பு, காலநிலை நடவடிக்கை, பசுமையான நிகழ்ச்சி நிரல் ஆகிய துறைகளில் சீனாவின் உறுதியான வாக்குறுதிகள், பல்வேறு நாடுகள் மேலும் உயர் நிலையிலான இலக்கை நோக்கி முன்னேறுவதை விரைவுபடுத்த விரும்புவதாக தெரிவித்தார்.
தவிரவும், உள்நாட்டில் பசுமையான வளர்ச்சி முறை மாற்றத்தை சீனா முன்னேற்றி வருவதுடன், வளரும் நாடுகளுடன் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, பசுமை வளர்ச்சியைக் கூட்டாக விரைவுபடுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.