சீனப் பாணியிலான நவீனமயமாக்கத்தின் திறவுகோல் என்ன?

சீனப் பாணியிலான நவீனமயமாக்கத்தின் திறவுகோலானது, அறிவியல் தொழில் நுட்ப நவீனமயமாக்கம் ஆகும். 15வது ஐந்தாண்டு திட்டக்காலம், அறிவியல் வல்லரசு கட்டுமானத்தின் தீர்க்கமான காலக்கட்டம். இவ்வாண்டில், அறிவியல் துறையின் தற்சார்பு மற்றும் தன்வலிமையை முன்னெடுக்கும் வகையில், அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் தொகுதியான முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.

15வது ஐந்தாண்டு திட்டக்காலத்தின் முதல் ஆண்டில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் முதலாவது கூட்டுப் படிப்பு, தொலைநோக்கு பார்வையுடன் எதிர்காலத் தொழிலின் வளர்ச்சியில் கவனம் செலுத்தியது. இவ்வாண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரின் முதலாவது உள்நாட்டு ஆய்வு பயணம், அறிவியல் புத்தாக்க மையத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, அறிவியல் துறை குறித்து முக்கிய கூட்டம் ஷாங்காயில் நடத்தியது. சீன நவீனமயமாக்கக் கட்டுமானத்தில் அறிவியல் புத்தாக்கத்தின் முக்கிய பங்கை, இவை வெளிக்காட்டின.

இவை மட்டுமல்லாமல், தேசிய அறிவியல் தொழில் நுட்ப விருது வழங்கும் மாநாடு, சீன அறிவியல் கழகம் மற்றும் பொறியியல் கழக மூத்த அறிஞர்களின் கூட்டம், சீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பச் சங்கத்தின் 11வது தேசிய மாநாடு ஆகியவை பெய்ஜிங்கில் நடைபெற்றன. உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு ஜுலை திங்கள் ஷாங்காயில் நடைபெற்றது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங், இவற்றில் கோரிக்கைகளையும் வளர்ச்சிக்கான வழிகாட்டலையும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author