சீனாவின் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் யீ லி நகரில், 2026ம் ஆண்டின் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கு ஆகஸ்ட் 4ம் நாள் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சீன வெளியுறவு அமைச்சகம், சின்ச்சியாங் அரசாங்கம் மற்றும் தொடர்புடைய சீன சிந்தனை கிடங்குகளின் பிரதிநிதிகளும், ஐக்கிய அரபு அமீரகம், ரஷிய, ஆப்பிரிக்க ஒன்றியம் முதலிய 24 நாடுகள் மற்றும் பிராந்திய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
உகலளாவிய பயங்கரவாத நடவடிக்கைகள் விறுவிறுப்பாக உள்ளன. உலகளாவிய தெற்கு பகுதியில், பயங்கரவாத எதிர்ப்பு நிர்ப்பந்தம் அதிகரித்து வருகிறது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், வளர்ச்சி, பாதுகாப்பு, நாகரிகம், நிர்வாகம் ஆகியவை குறித்து வழங்கிய முன்மொழிவுகள், பயங்கரவாத எதிர்ப்பு தீர்வுக்கு முக்கிய வழிக்காட்டியாக விளங்குகின்றன. சர்வதேச சமூகம், பலதரப்புவாதத்தைச் செயல்படுத்தி, திறன் கட்டுமானத்தை வலுப்படுத்தி, சர்வதேச சட்ட ஒழுங்கைப் பின்பற்றி, ஒத்துழைப்பின் அடித்தளத்தைப் பலப்படுத்த வேண்டும். இத்துறையில் சீனா தனது நிலைப்பாட்டையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டு, பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, பயங்கரவாத அச்சுறுத்தலைச் சமாளித்து, உலக அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காக்க விரும்புகிறது என்று சீனா இக்கருத்தரங்கில் தெரிவித்தது.
கருத்தரங்கின் போது, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரவாத ஒழிப்பு கண்காட்சியை பிரதிநிதிகள் பார்வையிட்டனர். இது குறித்து வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கூறுகையில், சின்ச்சியாங்கின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி சாதனைகள் மனதில் ஆழப்பதிந்துள்ளன என்றும், பல்வேறு துறைகளில் சீனாவுடனான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
