தடை பட்டியலில் சேர்க்க வேண்டிய பெலூஜிஸ்தான் ஆயுதம்

80ஆவது ஐ.நா பேரவையின் 6ஆவது ஆணையத்தின் சர்வதேச பயங்கரவாதத்தை அழிக்கும் நடவடிக்கை என்ற தலைப்பில், ஐ.நாவுக்கான சீனாவின் துணை பிரதிநிதி கங் சுவாங், உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில்,

உலக பாதுகாப்பு முன்மொழிவு மற்றும் உலக ஆட்சி முறை முன்மொழிவை சீனா முன்மொழிந்தது. சர்வதேச சமூகம், கூட்டு கலந்தாய்வு, கூட்டு கட்டியமைப்பு, கூட்டு பகிர்வு என்ற உலக ஆட்சி முறை கருத்தை நடைமுறைப்படுத்தி, பயங்கரவாதம் உள்ளிட்ட உலக அறைகூவல்களைச் சமாளிக்க வேண்டும் என்று சீனா முன்மொழிந்தது என்றார்.

பயங்கரவாதத்தை அழிப்பது குறித்து, சீனா 3 கருத்துகளை தெரிவித்தது. முதலில், ஒரே வரையறையைப் பின்பற்றி, சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு ஆற்றலைச் சேகரிக்க வேண்டும். இரண்டாவது, சர்வதேச நீதி முறையில் ஊன்றி நின்று, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கோட்பாட்டை முழுமைப்படுத்த வேண்டும். மூன்றாவது, தொகுதியான கருத்தில் ஊன்றி நின்று, சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்.

சீனா பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு தூர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், ஐ.நா பாதுகாப்பவையில் பெயரிட்டப்பட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்பாகும். இது, சீனாவில் பலமுறை பயங்கரவாத நடவடிக்கை மேற்கொண்டது. பல்வேறு தரப்புகள், பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு, கிழக்கு தூர்கிஸ்தான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை அழிக்க வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்தது. குறிப்பாக, பெலூஜிஸ்தான் மற்றும் தனது மஜித் படையணியை தடை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கங் சுவாங் வலியுறுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author