சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஹங்கேரியில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள போது, சீன ஊடகக் குழுமம் தயாரித்த “ஷி ச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் பழமொழி நிகழ்ச்சி”யின் வெளியீட்டு நிகழ்வு மே 8ஆம் நாள் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது.
ஹங்கேரியின் முன்னாள் அரசுத் தலைவர் பால் ஷ்மிட், முன்னாள் தலைமை அமைச்சர் பீட்டர் மெட்ஜிஸ்ஸி ஆகியோர் இந்நிகழ்வுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
8ஆம் நாள் முதல், ஹங்கேரி தேசிய தொலைக்காட்சி நிலையம் உள்ளிட்ட அந்நாட்டின் முக்கிய செய்தி ஊடகங்களில் இந்நிகழ்ச்சி அடுத்தடுத்து ஒளிபரப்பப்படும்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் உரைகளில் கூட்டு செழுமை, பசுமை வளர்ச்சி உள்ளிட்ட கருப்பொருட்களைப் பற்றிய பழமொழிகள் இந்நிகழ்ச்சியில் திரட்டப்பட்டுள்ளன.
சர்வதேச பார்வையில் சீனாவின் பழமொழி மற்றும் ஞானமும், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறந்த அரசியல் விவேகம் மற்றும் ஆழ்ந்த வரலாற்றுப் பண்பாட்டும் இந்நிகழ்ச்சியில் உயிர்த்துடிப்புடன் காட்டப்பட்டுள்ளன.
சீனப் பாணியுடைய நவீனமயமாக்கலின் பண்பாட்டு அடித்தளம் மற்றும் நிறைய சாதனைகளும் அதில் வெளிகாட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.