திருவள்ளூர் மாவட்டம், செம்பேடு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட சாமிசிலைகளை அதிகாரிகள் எடுத்து செல்லக்கூடாது எனக்கூறி கிராமத்தில் வைத்தே பூஜித்தனர்.
செம்பேடு கிராமத்தில் புதைந்த நிலையில் 4 அடி உயரமுள்ள சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இதனையறிந்த இந்துசமய அறநிலைய அதிகாரிகள் சிலைகளை மீட்டு செல்ல வந்தனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் அருள் வாக்கு கூறி சாமி சிலை இங்கேயே இருக்க வேண்டும் என்று கூறியதால் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இதையடுத்து அப்பகுதியிலுள்ள கோயிலில் வைத்து சாமி சிலைகளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது.