11.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் சாதனை! விஞ்ஞானிகள் உற்சாகம்  

Estimated read time 1 min read

நமது பால்வெளி அண்டத்திற்கு வெளியே சுமார் 11.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள UGC 9050-Dw1 என்ற விண்மீன் மண்டலத்தில், விண்மீன் நீரோடை (Stellar Stream) ஒன்றை வானியலாளர்கள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர்.
ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியின் பழைய தரவுகளைப் பகுப்பாய்வு செய்தபோது, அடர்ந்த நட்சத்திரக் கூட்டங்கள் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு மெல்லிய நீண்ட வரிசையாக மாறியிருப்பது தெரியவந்துள்ளது.
இக்கண்டுபிடிப்பு பற்றிய ஆய்வு விவரங்கள் புகழ்பெற்ற நேச்சர் அறிவியல் இதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author