சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் ஆன்மீக சக்தி

Estimated read time 1 min read

90 ஆண்டுகளுக்கு முன்பு, இளைஞர்கள் பலர் பனி மலைகளையும் புல்வெளிகளையும் கடந்து, 12 ஆயிரத்து 500 கீ.மி. தூரத்துக்கு நீண்ட பயணம் மேற்கொண்டனர். அப்போது, நாடு மற்றும் தேசத்தின் நலன்கள் எல்லாவற்றிலும் மிக முக்கியமானவை, நீதியான லட்சியம் நிச்சயமாக வெற்றி பெறும் என்ற உறுதியான நம்பிக்கையே அவர்களுக்கு ஆதரவளித்து வந்துள்ளது. இந்த நம்பிக்கை சீன மக்களால் நீண்ட பயணத்திற்கான மாபெரும் எழுச்சி என்று அழைக்கப்படுகிறது.

அதற்கு பிந்தைய நூறு ஆண்டுகளில், தேசிய கட்டுமானம், சீர்திருத்தம், வறுமை ஒழிப்பு, அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகிய  துறைகளில், சீனா இதே போன்ற ஆன்மீக சக்தியை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் ஆன்மீக அமைப்பு என்ற கருத்தை, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷிச்சின்பிங் முன்வைத்தார். இந்த ஆன்மீகத்தின் ஊற்றுமூலம், சீன மக்களுக்கு மகிழ்ச்சியையும் சீன தேசத்திற்கு மறுமலர்ச்சியையும் தேடும் இக்கட்சியை நிறுவுவதற்கான மாபெரும் எழுச்சியாகும். இந்த அமைப்பில் உள்ள ஒவ்வொரு ஆன்மீகமும், வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களிலிருந்து உருவாக்கப்பட்டது. மேலும் இந்த ஆன்மீக அமைப்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சி தன்னை நிர்வாகித்து நாட்டை வளர்ப்பதிலும், மக்களை சிறந்த வாழ்க்கையை நோக்கி வழிநடத்துவதிலும் உந்து சக்தியாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author