ஐ.நா. பொதுப் பேரவையின் 78ஆவது கூட்டத் தொடரின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் அண்மையில் பெய்ஜிங்கில் சீன ஊடகக் குழுமத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், இவ்வாண்டு, வசந்த விழா ஐ.நா.வின் விடுமுறை தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
வசந்த விழா, சீனா உலகிற்கு வழங்கும் அன்பளிப்பு என்று சுட்டிக்காட்டிய அவர், சீன மக்களுக்கு வசந்த விழா வாழ்த்து தெரிவித்தார். சீனாவில் அதிவேக ரயிலில் பயணம் செய்வது, கிராமத்துக்கு செல்வது உள்ளிட்ட பயண அனுபவங்களின் மூலமாக சீன மக்களின் கடும் உழைப்பை அறிந்து கொண்டதாகவும் பிரான்சிஸ் கூறினார்.
தவிரவும், காசாப் பகுதியில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று இப்பேட்டியில் மீண்டும் வேண்டுகோள் விடுத்த அவர், காசாவில் உள்ள பொது மக்களுக்கு அவசரமாக மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகத் வலியுறுத்தினார்.
தற்போது உலகில் மாற்றமும் குழப்பமும் நிறைந்துள்ளன. அமைதி இல்லாமல், நிலையான வளர்ச்சி இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.