சீன அரசு டிசம்பர் 8ம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 11 திங்கள் காலத்தில், சீன சரக்குகளின் ஏற்றுமதி இறக்குமதி தொகை, 41.21 இலட்சம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.6 விழுக்காடு அதிகரித்தது. இதில் நவம்பர் திங்கள் ஏற்றுமதி இறக்குமதி தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.1 விழுக்காடு அதிகம் என தெரிய வந்துள்ளது. இவ்வாண்டில் மாறி வரும் சர்வதேச சூழலில், மேலும் ஆக்கப்பூர்வமான கொள்கை நடைமுறையுடன் சீன பொருளாதாரம் நிலையாக வளர்ந்து வருகிறது. அது, ஆர்ப்பரிக்கும் அலைகளில் பயணிக்கும் கப்பல் போல், நிதானம், முன்னேற்றம், உறுதி ஆகிய மூன்று சிறப்புகளை வெளிக்காட்டுகிறது.
இவ்வாண்டின் முதல் 11 திங்களில், ஆசியான், ஐரோப்பிய ஒன்றியம், ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா முதலிய சந்தைகளுடன் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதியில் வளர்ச்சி காணப்பட்டது. இதற்கிடையில் அரசு சாரா தொழில் நிறுவனங்கள் மற்றும் அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி இறக்குமதி தொகையும் அதிகரித்தது. முதல் மூன்று காலாண்டுகளில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்தை விட 5.2 விழுக்காடு அதிகம். முழு ஆண்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சின் முக்கிய இலக்குகள் நிறைவேற்றப்படவுள்ளன.
முதல் 11 திங்கள் காலத்தில், சீன வெளிநாட்டு வர்த்தகப் பொருட்களின் கட்டமைப்பின் மேம்பாட்டுடன் ஏற்றுமதியின் உந்து சக்தி சீராக வளர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு, எண்ணியல் பொருளாதாரம் போன்ற புதிய தர உற்பத்தி திறன்கள் மேம்பட்டு வருகிறன. நுகர்வு துறையின் உந்து விசை மேலும் முனைப்புடன் காணப்பட்டது.
முதல் 3 காலாண்டுகளில் சீனாவின் பொருளாதார மதிப்பு, 2024ம் முழு ஆண்டில் ஜெர்மனியின் பொருளாதார மதிப்பைத் தாண்டியுள்ளது. அண்மையில் சீன பொருளாதார வளர்ச்சி மீதான மதிப்பை பல சர்வதேச நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
