இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ‘டைகர்’ முத்துவேல் பாண்டியனாக நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் OTT உரிமைகள் ரூ. 160 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக அதிக தொகைக்கு டிஜிட்டல் உரிமை விற்பனையான திரைப்படம் என்ற புதிய சாதனையை ‘ஜெயிலர் 2’ படைத்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.
விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையைக் காட்டிலும் அதிக தொகைக்கு ஒப்பந்தமாகி, ரஜினிகாந்தின் வசூல் சாதனையை இத்திரைப்படம் மீண்டும் நிரூபித்துள்ளது.
‘ஜெயிலர் 2’ OTT ரிலீஸ் உரிமை ரூ. 160 கோடிக்கு விற்பனை
