கொலம்பியாவுக்கு சீனாவின் நிவாரண உதவிப் பொருட்களை அனுப்பியது சீனா

சீனாவின் அவசர மனித நேய உதவிக்கான நிலநடுக்க நிவாரண பொருட்கள் உள்ளூர் நேரப்படி 18ஆம் நாள் நண்பகல் கொலம்பியா தலைநகர் பன்னாட்டு விமான நிலையத்திற்குச் சென்றடைந்துள்ளது.

அந்நாட்டிற்கான சீனத் தூதர் சூ ச்சிங் யாங், அந்நாட்டின் தொடர்புடைய பிரதிநிதிகள் முதலியோர் விமான நிலையத்தில் நிவாரண பொருட்களுக்கான ஒப்படைப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

அந்நாட்டின் பேரழிவு அபாயக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் டாமாயா அதே நாளில் காணொளி வழியாக உரை நிகழ்த்துகையில்,

பேரிடர் காலக்கட்டத்தில், சீன அரசு மற்றும் மக்கள் சார்பில் கொலம்பியாவுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசு மற்றும் பல்வேறு பிரதேசங்களில் அரசங்கங்கள், நிவாரண நிறுவனங்கள் உள்ளிட்டவை, அனுப்பியுள்ள நிவாரணப் பொருட்களை விநியோகம் செச்யும் பணி ஒருங்கிணைக்கும் என்றார்.

இதில் மின்னாக்கிகள், குடி நீர் வாகனங்கள், நச்சு ஒழிப்பு கருவிகள், சூரிய ஆற்றல் விளக்கு சாதனங்கள், கூடாரங்கள், கம்பளங்கள் முதலிய 80 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

You May Also Like

More From Author