சீனப் பொருளாதாரத்தின் தனிச்சிறப்புகள்

Estimated read time 0 min read

இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜுலை திங்கள் வரை, சீனாவின் ஆக்கத் தொழில், சேவை துறை, வெளிநாட்டு வர்த்தகம் முதலியவற்றின் பொருளாதாரக் குறியீடுகளின் அதிகரிப்புடன், சீனப் பொருளாதாரம் தொடர்ந்து சீரான வளர்ச்சி அடைந்து வருகிறது. சீனப் பொருளாதாரத்தின் வலிமையான மீள் தன்மை மற்றும் உயிராற்றலை இவை வெளிக்காட்டியதோடு, உலகப் பொருளாதாரத்துக்கு உந்து சக்தியை ஊட்டியுள்ளன என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இக்காலக்கட்டத்தில் பல்வகை வெளிப்புறப் பாதிப்புகள் மற்றும் உள்புற இன்னல்களை எதிர்கொண்ட சீனா, மேலும் ஆக்கப்பூர்வமான ஒட்டுமொத்தக் கொள்கைகளைச் செயல்படுத்தி, சீர்திருத்தத்தையும் உயர்நிலை வெளிநாட்டுத் திறப்புப் பணியையும் ஆழமாக்கி வருகிறது. அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் மூலம், உயர்தர வளர்ச்சியையும் முன்னேற்றி வருகிறது. நிலைத்தன்மை, புத்தாக்கம், மீள் தன்மை ஆகியவை, சீனப் பொருளாதாரத்தின் 3 தனிச்சிறப்புகளாகும்.

நிலைத்தன்மையுடன் இயங்கி வரும் சீனப் பொருளாதாரம், அன்னிய தொழில் நிறுவனங்களுக்கு நிலையான வளர்ச்சி எதிர்பார்ப்பைக் கொண்டு வருகிறது. இதற்கிடையில் புத்தாக்கத்தின் உயிராற்றல், சீனாவில் அன்னிய முதலீட்டைத் தொடர்ந்து ஈர்த்துள்ளது. இவற்றைத் தவிர, சீனப் பொருளாதாரத்தின் மீள் தன்மை, உலகிற்கு மதிப்புள்ள உறுதித் தன்மையை ஊட்டியுள்ளது. இவ்வாண்டு முதல், “சீனாவுக்கு ஏற்றுமதி”என்னும் நிகழ்ச்சி, பல நாடுகளில் வெற்றிகரமாக நடைபெற்றது.

சீனா, உலகப் பொருளாதாரத்துக்கு மேலதிகமான வாய்ப்புகளை கொண்டு வருவது உறுதி.

You May Also Like

More From Author