கேரளாவை சேர்ந்த விஞ்ஞானிகளின் முயற்சிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU), செவ்வாய் கிரகத்தில் புதிதாக கண்டறியப்பட்ட பல புவியியல் அமைப்புகளுக்கு கேரளாவில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த புகழ்பெற்ற புவியியலாளர் ஒருவரின் பெயர்களை சூட்ட ஒப்புதல் அளித்துள்ளது.
கேரள விஞ்ஞானிகளான ஆசிஃப் இக்பால் கக்கசேரி மற்றும் ராஜேஷ் வி.ஜே. ஆகியோரால் முன்மொழியப்பட்ட இந்தப் பெயர்கள், செவ்வாயின் “சாந்தே டெர்ரா” (Xanthe Terra) பகுதியில் உள்ள பள்ளங்கள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு அதிகாரப்பூர்வமாக சூட்டப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நீர் இருந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
செவ்வாயில் கேரள பெயர்கள்: பெரியார், தும்பா, வர்கலா இனி செவ்வாய் கிரக பள்ளங்கள்
