21வது சீனாவின் சாங்ச்சுன் திரைப்பட விழா தொடக்கம்

Estimated read time 1 min read

 

சீன ஊடகக் குழுமமும் ஜிலின் மாகாணத்தின் அரசும் கூட்டாக நடத்திய 21வது சீனாவின் சாங்ச்சுன் திரைப்பட விழா ஆகஸ்ட் 23ஆம் நாளிரவு சாங்ச்சுன் நகரில் தொடங்கியது.

6 நாட்கள் நடைபெறும் இந்த திரைப்பட விழா, இளமையின் தனிச்சிறப்புகள், திரைப்படத் துறையில் புதிய சக்திகள் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இவ்விழாவின் போது, திரைப்பட இசை நிகழ்ச்சி, திரைப்பட சந்தை உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும், சுமார் 500 திரையிடல் நடவடிக்கைகளும் நடைபெற உள்ளன. மேலும், திரைப்படக் கூப்பன்களை வழங்குதல், திரைப்படத்துடன் சாங்ச்சுன் நகரைச் சுற்றி பார்த்தல் என்ற சுற்றுலா பாதைகள் அறிமுகம் செய்தல் ஆகியவற்றின் மூலம், சாங்ச்சுன் நகரம் பல்வேறு புதிய நுகர்வு முறைகளை உருவாக்கி, நகரின் கலாச்சார ஆற்றலைத் தூண்டுகிறது.

You May Also Like

More From Author