ரஷிய அரசுத் தலைவர் புதினுடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு

Estimated read time 1 min read

ஆகஸ்டு 31ஆம் நாள் பிற்பகல், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெறுகின்ற 2026ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற போது, ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினுடன் சந்திப்பு நடத்தினார்.  

அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டின் மே திங்கள், அரசுத் தலைவர் புதின் சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். புதிய நிலைமையில் பல்வேறு துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்புகளை ஆழமாக்குவது குறித்து நாங்கள் ஒத்தக் கருத்துக்களை எட்டியுள்ளோம். நமது நெடுநோக்கு வழிக்காடல் மற்றும் இரு தரப்புகளின் கூட்டு முயற்சிகளுடன், சீன-ரஷிய உறவின் வளர்ச்சி மேலும் வலுப்படுத்தப்படும் என்றார். மேலும், ரஷியா உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சித் திட்டத்தைக் கூட்டாக கலந்து ஆராய்ந்து, உலக ஆட்சிமுறையின் சீர்திருத்ததிற்க்கு வழிக்காட்டி, உலக பலதுருவமயமாக்கத்தின் ஆற்றலை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார். 

புதின் கூறுகையில், சிக்கலான சர்வதேச நிலைமையில், ரஷியாவும் சீனாவும் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து வருகின்றன என்றார். மேலும், சீனாவுடன் உயர்நிலை பரிமாற்றத்தை நிலைநிறுத்தி, வர்த்தகம், எரியாற்றல், தொழில் துறை, போக்குவரத்து, தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இரு நாட்டுறவு புதிய சாதனைகளைப் பெறுவதை முன்னேற்ற ரஷியா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார் 

Please follow and like us:

You May Also Like

More From Author