110 ஆண்டுகள் நிறைவு செய்த இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் ரயில்வே பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் கடல் பாலம், 110 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலத்தை அகற்ற ரயில்வே சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. பாம்பன் பழைய பாலத்தை அகற்றும் பணிகளுக்காக மொத்த தொகையாக ரூ.2.81 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பாம்பன் பழைய பாலத்தை அகற்றும் பணியை 4 மாதங்களில் முடிக்க ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடுமையான புயல்களை எதிர்கொண்டு தனது வலிமையையும், பொறியியல் திறனையும் வெளிப்படுத்திய பாம்பன் பாலம், ராமேஸ்வரம் தீவை பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் பாலமாகும்.
