அமெரிக்க-சீன வர்த்தக கவுன்சில் இயக்குனர் குழு பிரதிநிதிகளுடன் லீச்சியாங் சந்திப்பு

சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 3ஆம் நாள் பிற்பகல், பெய்ஜிங் மாநகரில், அமெரிக்க-சீன வர்த்தக கவுன்சில் இயக்குனர் குழுவின் தலைவர் மைக்னர்னி தலைமையிலான குழுவினர்களுடன் சந்தித்துரையாடினார்.

லீச்சியாங் கூறுகையில்,

சீன-அமெரிக்க உறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இக்கவுன்சில் நீண்டகாலமாக விரைவுபடுத்தி வருவதோடு, முக்கிய பங்காற்றியுள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் கூட்டு நெடுநோக்கு வழிக்காட்டலின்படி, பேச்சுவார்த்தையும் தொடர்பையும் வலுப்படுத்தி, கூட்டு நலன் தரும் ஒத்துழைப்புகளை விரிவாக்கி, சீன-அமெரிக்க ஆக்கப்பூர்வமான நெடுநோக்கு உறவைக் கட்டியமைத்து, மேலதிகமான பயனுள்ள சாதனைகளைப் பெற சீனா விரும்புவதாக தெரிவித்தார்.

இக்கவுன்சில் தொடர்ந்து சொந்த செல்வாக்குகளைப் பயன்படுத்தி, சீன-அமெரிக்க உறவின் நிதானமான, சீரான, தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும் லீச்சியாங் விருப்பம் தெரிவித்தார்.

You May Also Like

More From Author