சீனப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், சீனாவின் 54 நகரங்களில் 313 நகரப்புற ரயில் போக்குவரத்து நெறிகள் இயங்கப்பட்டுள்ளன.
இந்த நெறிகளின் மொத்த நீளம் சுமார் 10ஆயிரத்து 522கிலோமீட்டராகும். 34லட்சம் தொடர்வண்டிகள் சேவையளித்து வருகின்றன. 271கோடி பயணங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நவம்பரில் ரயில் போக்குவரத்து மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் மொத்த எண்ணிக்கை அக்டோபரில் இருந்ததை விட, 2.2விழுக்காடு குறைந்தது. கடந்த ஆண்டைக் காட்டிலும், 5.2விழுக்காடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.