சுற்றுச்சூழலை மேம்படுத்தி யுன்டாங் ஏரியில் குறிப்பிடத்தக்க பலன்கள்

Estimated read time 1 min read

ஃபுஜியான் மாகாணத்தின் கடலோர நகரான சியாமெனின் மேற்குப் பகுதியில் உள்ள யுன்டாங் ஏரி, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தற்போது, தெரிந்த தண்ணீர் மற்றும் பசுமை மரங்களால் சூழப்பட்டு இந்த ஏரிக்கு, “நகரத்தில் விருந்தினரை வரவேற்கும் அரங்கு” என்ற பெருமை பெற்றுள்ளது.

1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், யுன்டாங் ஏரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விரிவான நடவடிக்கை அமலுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, சூற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டம் ஐந்து கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. 2024ஆம் ஆண்டில் 6 கட்டக்கால மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.

தொடர்ச்சியான முயற்சிகளுடன், யுன்டாங் ஏரிப்பகுதியில் உயிரின வாழ்க்கைச்சூ சூழல் தொடர்ந்து மேம்பட்டு, பலன் அடைந்துள்ளது. தற்போது, ஏரிப்பகுதியில் சுமார் 250 வகை நீர்வாழ் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  98 வகை பறவைகள் இங்கு வாழ்கின்றன. 26ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட சதுப்பு நிலக் காடுகள் காணப்பட்டுள்ளன.

ஓய்வு மற்றும் உடற்பயிற்சிக்கான சிறந்த இடம் அளிக்கும் யுன்டாங் ஏரி, நகரவாசிகளுக்கு உண்மையான நன்மையை ஏற்படுத்தியுள்ளது. சியாமென் நகரில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான அடையாளச் சின்னமாகவும் மாறியுள்ளது. மேலும், மனிதன்களும் இயற்கையும் இணக்கமாக வாழ்வதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இந்த ஏரி உருவெடுக்கிறது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author