23 ஆண்டுகளில் ஜாம்பவான்கள் இறுதிப்போட்டியில் பங்கேற்காத முதல் காலண்டர் கிராண்ட்ஸ்லாம்  

Estimated read time 1 min read

டென்னிஸ் உலகின் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள ஜானிக் சின்னர் மற்றும் கார்லோஸ் அல்கராஸ் இடையே புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக, இவ்விரு வீரர்களும் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் மோத உள்ளனர்.
2003 ஆம் ஆண்டிற்குப் பிறகு, டென்னிஸ் ஜாம்பவான்களான நோவக் ஜோகோவிச், ரோஜர் ஃபெடரர் அல்லது ரஃபேல் நடால் ஆகிய மூவரில் ஒருவர் கூட கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியை அடையாத முதல் ஆண்டு இதுவாகும்.
கார்லோஸ் அல்கராஸ் ஒரு செட்டைக் கூட இழக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
அதேசமயம், ஜானிக் சின்னர் தனது அரையிறுதியில், கனடாவின் ஃபெலிக்ஸ் ஆஜர்-அலியாஸிமை 6-1, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து முன்னேறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author