ஷி ச்சின்பிங்கின் தலைமையில் நடைபெற்ற ஒழுங்கு பரிசோதனை அறிக்கையை மீளாய்வு செய்யும் கூட்டம்

20ஆவது மத்தியக் கமிட்டியின் 7ஆவது ஒழுங்கு பரிசோதனை பற்றிய ஒட்டுமொத்த அறிக்கையைப் பரிசீலனை செய்யும் வகையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு அக்டோபர் 23ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

ஷி ச்சின்பிங்கை மையமாகக் கொண்ட கட்சி கமிட்டியின் வலிமையான தலைமையில் 7ஆவது ஒழுங்கு பரிசோதனை பணி ஆழ்ந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு குறிப்பிட்டத்தக்க பயன்களைப் பெற்றுள்ளது. மத்திய மற்றும் அரசு வாரியங்களின் பணிகளில் ஆக்கப்பூர்வ முன்னேற்றங்கள் காணப்பட்ட போதிலும் சில பிரச்சினைகள் நிலவுகின்றன. இதற்கு முக்கியத்துவம் அளித்து உணர்வுபூர்வமாக பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். சீர்திருத்தத்துக்கான பொறுப்பையும் கண்காணிப்பையும் வலுப்படுத்தி, நிர்வாகச் செயல்திறன் பற்றிய சரியான கருத்தைச் செயல்படுத்தி நடைமுறையில் உண்மையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author