ஜூனியர் மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கி: ஜப்பானை 7-0 என வீழ்த்தி இந்தியா காலிறுதிக்கு முன்னேற்றம்  

Estimated read time 1 min read

ஜூனியர் மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது மூன்றாவது எலைட் பிரிவு ஆட்டத்தில் ஜப்பானை 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
தொடக்க ஆட்டத்தில் கொரியாவை 4-1 எனவும், மலேசியாவை 11-1 எனவும் வீழ்த்தியிருந்த இந்திய அணி, ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்திலும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.
மூன்று போட்டிகளில் ஒன்பது புள்ளிகளுடன் இந்திய அணி தற்போது தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது. தனது கடைசி லீக் ஆட்டத்தில் சீனாவுடன் இந்திய அணி விளையாட உள்ளது.

You May Also Like

More From Author