சீன நீர் வள அமைச்சகத்தின் தகவலின்படி, மே 14ஆம் நாள் வரை, குவாங்சி ட்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள டாடெங்சியா எனும் நீர் சேமிப்புத் திட்டப்பணி மூலம் 2000கோடி கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளத் தடுப்பு, கப்பல் போக்குவரத்து, மின்சார உற்பத்தி, பாசனம் முதலிய செயல்திறன் இத்திட்டப்பணிக்கு உண்டு. 8 ஹைட்ரோ-ஜெனரேட்டர் தொகுப்பைக் கொண்ட அதன் மின்சார உற்பத்திக்கான மொத்த ஆற்றல் 16லட்சம் கிலோவாட்டை எட்டியுள்ளது.
தற்போது வரை, டாடெங்சியா நீர் மின் நிலையம் 1800க்கும் அதிகமான நாட்களைத் தாண்டியும் பாதுகாப்பாக இயங்கி வருகிறது.