ஏப்ரல் முதல் நாள் சீன மக்கள் விடுதலை படையின் கிழக்குப் போர் மண்டலம் தைவான் தீவைச் சுற்றியுள்ள கடல் பரப்பில் கூட்டுப் பயிற்சிகளை நடத்தியது.
இது குறித்து சீன அரசவை தைவான் விவகாரப் பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜு ஃபெங்லியன் கூறுகையில், இந்த இராணுவப் பயிற்சி, லாய் சிங்டே அதிகார வட்டாரத்தின் வெறித்தனமான தந்திரம் மற்றும் ஆத்திரமூட்டலுக்கு உறுதியான தண்டனையாகும் என்றும் தைவான் சுதந்திர மற்றும் பிரிவினைவாத சக்திகள், தைவான் நீரிணை இரு கரை பிரதேசத்தின் அமைதியை வேண்டுமென்றே சீர்குலைப்பதற்குக் கடுமையான எச்சரிக்கையாகும் என்றும் கூறினார்.
தேசிய இறையாண்மையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கை இதுவாகும் என்றார்.