உலகளாவிய 100 முன்னணி புதுமைப் படைப்புத் தொகுதிகளில் சீனா முதலிடம்

Estimated read time 1 min read

2026 உலகப் புத்தாக்கக் குறியீட்டு அறிக்கையை உலக அறிவுசார்ச் சொத்துரிமை அமைப்பு 8ஆம் நாள் வெளியிட்டது. இதில் சீனாவின் ஷென்ச்சேன்-ஹாங்காங்-குவாங்சோ தொகுதி தொடர்ந்து 2ஆவது ஆண்டாக இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும், உலகளாவிய 100 முன்னணி புதுமைப் படைப்புத் தொகுதிகளில் சீனாவைச் சேர்ந்த 25 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இவ்வெண்ணிக்கையுடன் சீனா தொடர்ந்து 4 ஆண்டுகளாக உலகளாவிய முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த 4 தொகுதிகள் இப்பட்டியில் இடம்பெற்றுள்ளன.

இவ்வறிக்கையில் கூறப்பட்ட புதுமைப்படைப்புத் தொகுதியானது, நகரம் அல்லது நகரக் கூட்டத்தைக் குறிப்பிட்டது. காப்புரிமை ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்படி விண்ணப்பம் செய்துள்ள கண்டுபிடிப்பாளர் இருக்கும் இடம், அறிவியல் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டவர் சேர்ந்த நிறுவனம், துணிகர மூலதன நிதியைப் பெற்ற நிறுவனம் இருக்கும் இடம் ஆகிய மூன்று குறியீடுகளின் படி இந்த தரவரிசை நிர்ணயிக்கப்பட்டது.

You May Also Like

More From Author