சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைக்கான ஜெனீவா கூட்டறிக்கையின்படி, அமெரிக்க நேரப்படி மே 14ஆம் நாள் முதல் சீனா மீதான கூடுதல் சுங்க வரி விதிப்பை சரிப்படுத்த அமெரிக்கா நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்கா மீதான கூடுதல் சுங்க வரி விதிப்பை மே 14ஆம் நாள் முதல் வரும் 90 நாட்களுக்குள் 34விழுக்காட்டிலிருந்து 10விழுக்காடாக சரிப்படுத்துவதாக சீனா அறிவித்துள்ளது.
சீனாவும் அமெரிக்காவும் பரஸ்பர வரி விதிப்பைப் பெருமளவில் குறைப்பது இரு நாட்டின் உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக உள்ளது. இரு நாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக பரிமாற்றத்துக்கும் உலகப் பொருளாதாரத்துக்கும் நன்மை பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.