ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரேஸ் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார். இவ்வாண்டு, சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்ற 80வது ஆண்டு நிறைவாகும்.
இதை ஒட்டி அவர் கூறுகையில், 2வது உலக போரின் வெற்றிக்கு சீனா ஆற்றிய பங்கை, உலகம் நினைவில் கொள்ள வேண்டும். சீனாவின் ஆற்றல், 2வது உலக போரில் கூட்டணி நாடுகள் வெற்றி பெற்றதன் திறவுகோலாகும். சீனா முன்வைத்த உலகளாவிய முன்மொழிவுகளைப் பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்.
நாங்கள் கவனம் செலுத்திய பிரச்சினைகள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த முன்மொழிவுகளுடன் நெருங்கிய தொடர்பு உடையவையாக உள்ளன. ஷிச்சின்பிங் அவர்கள், தெளிவான நெடுநோக்கு பார்வை கொண்டவராவார். அவர், தொலைநோக்கு பார்வையுடன், நீண்டகால திட்டங்களை வகுக்கிறார். மேலும், அமைதி மற்றும் பாதுகாப்பு, தொடரவல்ல வளர்ச்சி, மனித உரிமைகள் உள்ளிட்ட ஐ.நாவின் கடப்பாடுகளில் சீனா ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு வருகிறது. அடுத்த கட்டத்தில், செயற்கை நுண்ணறிவு, பிதுபிக்கவல்ல எரியாற்றல் ஆகிய துறைகளில் சீனாவும், ஐ.நாவும் முக்கிய ஒத்துழைப்புகளை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறேன் என்றும் குட்ரேஸ் தெரிவித்தார்.