சென்செள 20 எனும் மனிதரை விண்வெளி ஏற்றிச்செல்லும் விண்கலத்தைச் சீனா ஏப்ரல் 24ஆம் நாள் 17:17மணிக்கு விண்ணில் செலுத்தவுள்ளது. லாங்மார்ச்-2 எஃப் ஏவூர்தி மூலம் இவ்விண்கலம் செலுத்தப்படும். செட்துன், செட்ஜூன்ரேய், வாங் ஜெய் ஆகியோர் விண்வெளி வீரர்களாகப் பணியாற்றுவர்.
அவர்கள், சென்சௌ 19 விண்கலத்தின் விண்வெளி வீரர்களுடன் பணிப் பரிமாற்றம் செய்து விண்வெளி நிலையத்தில் சுமார் 6 மாதங்கள் தங்கி விண்வெளி அறிவியல் மற்றும் பயன்பாட்டு சோதனைகள், விண்வெளிவீரர் அறையிலிருந்து வெளியே வருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.