சீன அரசுத்தலைவர் முன்வைத்த 4 முன்னோடிகளுக்கான முன்மொழிவுகளின் வழிகாட்டும் பங்கு

செப்டம்பர் 12ஆம் நாள் பிற்பகல் புது தில்லியில் நடைபெற்ற 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் கட்டக் கூட்டத்தில் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் உரைநிகழ்த்தியபோது, முன்னோடிகளாக திகழ நான்கு முக்கிய கருத்துக்களை முன்வைத்தார். புத்தாக்க வளர்ச்சியை முன்னெடுத்தல், அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காத்தல், நாகரிகங்களுக்கிடையே பரஸ்பர கற்றலை ஊக்குவித்தல், உலகளாவிய ஆட்சிமுறையை சீர்திருத்தம் செய்து அதனை மேம்படுத்துதல் ஆகிய துறைகளில் பிரிக்ஸ் நாடுகள் முன்னோடிகளாகத் திகழ வேண்டும் என்று இந்த 4 கருத்துக்களில் இடம்பெற்றுள்ளன. இது, பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்புமுறைக்கான முன்னோக்கிய வழியைக் காட்டியதோடு, கொந்தளிப்பு மற்றும் சீர்திருத்தத்தை நிறைந்த உலகிற்கு விலைமதிப்பற்ற உறுதித்தன்மையை ஊட்டியுள்ளது. இதுவும், நடப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்ற விருந்தினர்களுக்கிடையே பெரும் பாராட்டைப் பெற்றதுடன், சர்வதேச சமூகத்திலும் பரவலான நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஷிச்சின்பிங் முன்வைத்த நான்கு முன்னோடிகளுக்கான முன்னொழிவுகள், பிரிக்ஸ் நடைமுறையாக்கத்தை அடிப்படையாக கொண்டு, உலகின் மாற்றங்களைத் தழுவிக்கொண்டு, இன்று உலகில் ஏற்பட்ட முனைப்பான முரண்பாடுகளுக்கு துல்லியமாகப் பதிலளிக்கின்றன. முதலில், புத்தாக்க வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும் என்றால், அறிவியல் தொழில் நுட்ப புரட்சியில் உறுதியாக முன்முயற்சி எடுத்து, உலகின் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட மேடைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்தி, திறந்த-மூல மென்பொருள் மற்றும் வெளிப்படைத்தன்மையும் ஒத்துழைப்பு மற்றும் பகிர்வையும் ஊக்குவிக்க வேண்டும். இரண்டாவது, அமைதியையும் நிலைத்தன்மையையும் பேணுவதில் முன்னோடியாக இருப்பது என்றால், பொதுவான, விரிவான, கூட்டுறவு வாய்ந்த மற்றும் தொடரவல்ல பாதுகாப்புக் கருத்துக்களைப் பின்பற்றி, பனிப்போர் சிந்தனையையும் அணி மோதலையும் உறுதியாக எதிர்த்து, பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதை எதிர்த்து, பதற்றமான பகுதிகளில் இணக்க முயற்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்க வேண்டும். மூன்றாவது, நாகரிகங்களிடையே பரஸ்பர கற்றலை ஊக்குவிப்பதில் முன்னோடியாக இருப்பது என்றால், மனிதகுலத்தின் பொதுவான விழுமியங்களை பரவல் செய்து, பண்பாட்டு சுற்றுலா, கல்வி மற்றும் இளைஞர் பரிமாற்றங்களின் மூலம் மக்களுக்கிடையேயான புரிந்துணர்வை மேம்படுத்த வேண்டும். நான்காவது, உலகளாவிய ஆட்சிமுறை சீர்திருத்துவதிலும் மேம்படுத்துவதிலும் முன்னோடியாக இருப்பது என்றால், ஐ.நாவின் அதிகாரத்தை உறுதியாக பேணிக்காத்து, பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையைப் பாதுகாப்பது, பாதுகாப்புவாதத் தடைகளை உடைத்தெறித்து, உலகளாவிய தெற்கு நாடுகளின் கருத்து வெளிப்பாட்டுரிமையை வலுப்படுத்த வேண்டும்.

நான்கு முன்னோடிகளுக்கான முன்மொழிவானது, ஒன்றுக்கொன்று இணைந்து முக்கிய பங்காற்றுகிறது.

You May Also Like

More From Author