சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு “வேளாண்மை, கிராமப்புறங்கள், விவசாயிகள்” ஆகிய மூன்று தரப்புகளின் பணிகளை வழிநடத்தும் வகையில், 12வது மத்திய அரசின் முதலாவது ஆவணம் பிப்ரவரி 3ஆம் நாள் வெளியிடப்பட்டது. கிராமப்புறங்களின் விரிவான புத்துயிர் பெறுதலை வலிமையான மற்றும் பயனுள்ள முறையில் முன்னேற்ற நெறிவரைபடத் திட்டம் இதில் முன்வைக்கப்பட்டது.
கிராமப்புற நிர்வாகம் மற்றும் கட்டுமானப் பணி அனுபவத்தைக் கற்றுக்கொண்டு, கிராமப்புறங்களின் விரிவான புத்துயிர் பெறுதலை வலிமையான மற்றும் பயனுள்ள முறையில் முன்னேற்றுவது பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மற்றும் சீன அரசவையின் கருத்து இந்த ஆவணத்தின் தலைப்பாகும். தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், வறுமை நிலையிலிருந்து மீண்டவர்கள் மீண்டும் பாதிக்காத நிலையை உறுதி செய்தல், கிராமப்புற தொழில்துறை வளர்ச்சியின் நிலையை உயர்த்துதல், கிராமப்புற கட்டுமானத்தின் தரத்தை உயர்த்துதல், கிராமப்புற நிர்வாகத்தின் நிலையை மேம்படுத்துதல், “வேளாண்மை, கிராமப்புறங்கள் மற்றும் விவசாயிகளின்” பணிகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பன்முகத் தலைமையையும் வலுப்படுத்துதல்ஆகிய 6 பகுதிகள் இதில் அடங்கும்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 2வது முழு அமர்வின் எழுச்சியைப் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
“வேளாண்மை, கிராமப்புறங்கள் மற்றும் விவசாயிகள்” பணிகள் பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கின் முக்கிய கருத்துக்களை ஆழமாகச் செயல்படுத்தி, கிராமப்புறங்களின் விரிவான புத்துயிர் பெறுதலில் புதிய முன்னேற்றங்களைத் தொடர்ந்து படைக்க வேண்டும் என்று கிராமப்புறப் பணிகளுக்கான சீன மத்திய தலைமைக் குழுவின் அலுவலகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.