நாசாவுடன் இணைந்து இஸ்ரோ தயாரித்துள்ள நிசார் செயற்கைக்கோள், வரும் 30ம் தேதி விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக நாசாவுடன் இணைந்து பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது.
இந்த செயற்கைக்கோள், ஒவ்வொரு 12 நாட்களுக்கும் முழு உலகத்தையும் ஸ்கேன் செய்து உயர் தெளிவுத்திறன், வானிலை, பகல் மற்றும் இரவின் தரவுகளை வழங்கும் எனவும் இதன்மூலம் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களை கூட கண்டறிய முடியும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடல், பனி கண்காணிப்பு, கப்பலைக் கண்டறிதல், புயல் கண்காணிப்பு, மண் ஈரப்பத மாற்றங்கள், பேரிடர் மீட்பு உள்ளிட்ட பல முக்கிய பணிகளை மேற்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் வரும் 30ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.