சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் பிரான்ஸ் அரசுத் தலைவர் மாக்ரோனும் ஜனவரி 27ஆம் நாள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.
ஷி ச்சின்பிங் கூறுகையில் 60 ஆண்டுகளுக்கு முன், சீனாவும் பிரான்ஸும் தூதர் நிலைத் தூதாண்மை உறவை நிறுவின. பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு என்ற சரியான திசையை நோக்கி உலக கட்டமைப்பு மாறுவதை இந்த சம்பவம் முன்னேற்றியுள்ளது.
தற்போது இது இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த 60 ஆண்டுகளில், இரு நாட்டுறவு அதிக சாதனைகளைப் பெற்று, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் அதே வேளையில், உலக அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிகாத்து, உலகத்தின் பலதுருவமயமாக்கம் மற்றும் சர்வதேச உறவின் ஜனநாயகமயமாக்கத்தை விரைவுபடுத்துவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
சீன-பிரான்ஸ் உறவின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதாகவும், அரசுத் தலைவர் மாக்ரோனுடன் இணைந்து, இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 60ஆவது ஆண்டு நிறைவை வாய்ப்பாக கொண்டு, இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவுக்கு மேலதிக வலிமையும் உயிராற்றலும் உட்புகுத்தி, இரு நாட்டு மக்கள் மற்றும் உலக மக்களின் நன்மைகளை அதிகரிக்க மேலதிக பங்காற்ற வேண்டும் என விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாக்ரோன் கூறுகையில், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் இணைந்து, இரு தரப்பு பொருளாதாரம், வர்த்தகம், பண்பாடு மற்றும் இளைஞர் உள்ளிட்ட துறைகளிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றி, உலகளாவிய விவகாரங்களில் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.