ஜூலையில், நுகர்வு துறையில், பழைய பொருட்களுக்குப் பதிலாக புதிய பொருட்களை வாங்குதல் பெரிதும் ஊக்கமளிக்கப்பட்டு வருகின்றது. அதே வேளையில், சேவை நுகர்வின் உயர்தர வளர்ச்சியை மேம்படுத்தியதோடு, நுகர்வின் நிதானமான வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் சமூக நுகர்வுப் பொருட்களின் சில்லறை விற்பனையின் மொத்த தொகை 3 இலட்சத்து 78 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டை விட 2.7 விழுக்காடு அதிகம் என்று சீன வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தவிர, நுகர்வு தேவையானது நகரங்களை விட கிராமப்புறங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஜூலையில் கிராமப்புறங்களில் நுகர்வுப் பொருட்களின் சில்லறை விற்பனை தொகை 50 ஆயிரத்து 660 கோடி யுவானாகும்.
இது, கடந்த ஆண்டை விட 4.6 விழுக்காடு அதிகமாகும். நகரங்களில் நுகர்வுப் பொருட்களின் சில்லறை விற்பனை தொகையை விட கிராமப்புறங்களில் நுகர்வுப் பொருட்களின் சில்லறை விற்பனை வளர்ச்சி விகிதம் 2.2 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.