சீன மற்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ செப்டம்பர் 9ஆம் நாள் பெய்ஜிங்கில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலாகிருஷ்ணனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வாங் யீ கூறுகையில், சிங்கப்பூருடன் இணைந்து வளர்ச்சி நெடுநோக்கு இணைப்பை வலுப்படுத்தி, எண்ணியல் பொருளாதாரம், பசுமை வளர்ச்சி முதலிய துறைகளில் மேலதிக ஒத்துழைப்பு மேற்கொள்ள சீனா விரும்புவதாகவும், மக்களிடையேயான பரிமாற்றத்தை விரிவுபடுத்தி, திறன் பயிற்சி, சிந்தனை கிடங்கு மற்றும் ஊடகம், இளைஞர், உள்ளூர் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாட்டு மக்களின் நட்பறவை அதிகரிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

விவியன் பாலாகிருஷ்ணன் கூறுகையில், ஒரே சீனா என்ற கொள்கையை சிங்கப்பூர் கடைப்பிடிக்கிறது. அடுத்த ஆண்டு சிங்கப்பூர்-சீன தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 35ஆவது ஆண்டை வாய்ப்பாக கொண்டு, பன்முக ஒத்துழைப்பை விரிவுபடுத்த விரும்புவதாகவும், சீனாவுடன் புதிய தரை, கடல் வழிகள் முதலிய முக்கிய திட்டப்பணிகளின் ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னேற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author