ஐ.நா. தலைமையகத்தை வந்தடைந்த சாங்ஏ-6 விண்கலம் சேகரித்த நிலவின் மறுபக்க மண் மாதிரிகள்

Estimated read time 1 min read

சாங்ஏ-6 விண்கலம் சேகரித்த நிலவின் மறுபக்க மண் மாதிரிகளை ஐ.நாவுக்கு சீனா அதிகாரப்பூர்வமாக வழங்கியது. வியன்னாவிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் 14ஆம் நாள் சீன தேசிய விண்வெளி நிர்வாகம், வியன்னாவில் உள்ள ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி குழுக்கள், விண்வெளி விவகாரத்துக்கான ஐ.நா. அலுவலகம் ஆகியவை இதற்கான ஒப்படைப்பு விழாவை நடத்தின. வியன்னாவில் உள்ள சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், பல்வேறு நாடுகளின் நிரந்தர பிரதிநிதிகள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த மண் மாதிரிகள் ஐ.நா தலைமையகத்தில் நிரந்தரமாக காட்சிப்படுத்தப்பட உள்ளன.

விண்வெளி துறையில் சீனாவின் சாதனைகளைப் பாராட்டிய இவ்விழாவில் பங்கேற்ற விருந்தினர்கள், விண்வெளி துறையில் சீனா தனது சாதனைகளைப் பகிர்ந்துகொள்வது உலகளாவிய விண்வெளி நிர்வாகத்திற்கு சீனாவின் பங்களிப்பை வழங்கியுள்ளது என்றும், விண்வெளியை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்காக சீனாவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.

You May Also Like

More From Author