அடிப்படை ஆராய்ச்சியை வலுப்படுத்துதல் பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங்கின் கட்டுரை செப்டம்பர் 16ஆம் நாள் புதன்கிழமை ச்சியூஷி இதழில் வெளியிடப்படவுள்ளது.
அடிப்படை ஆராய்ச்சியானது, அறிவியல் அமைப்புமுறையின் அடித்தளமாகவும், உலகளாவிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப போட்டியின் முன்னணித் துறையாகவும் திகழ்கிறது என்றும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சீனாவை ஒரு முன்னணி நாடாகக் கட்டியமைப்பதற்காக, நாட்டின் அடிப்படை ஆராய்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்றும் இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
