சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகத்தின் செய்தியாளர் கூட்டம் 15ஆம் நாள் நடைபெற்றது. சீன தேசிய புள்ளிவிவரப் பணியகத்தின் பொறுப்பாளர் ஒருவர் இதில் கூறுகையில், ஆகஸ்ட் மாதம், சீன தேசியப் பொருளாதாரம் சீராகவும், நிதானமாகவும் இருந்தது என தெரிவித்தார்.
மேலும் இது குறித்து, இப்பணியகம் 15ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்கள், 2026ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் கடந்த ஆண்டு அதே காலத்தில் இருந்ததை விட 5.2 விழுக்காட்டு வளர்ச்சி அடைந்தது.
அதை போல, தேசிய சேவைத் துறை உற்பத்திக் குறியீடு 4.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, சமூக நுகர்வு வணிகப் பொருட்கள் மற்றும் மொத்த சேவை சில்லறை விற்பனைத் தொகை 2.5 விழுக்காடு அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
