சீனாவில் தனியாருக்குச் சொந்தமான ராக்கெட் செயற்கைகோள்கள் வலையமைப்புப் பணி முதல் வெற்றி

 

சீனாவின் ஜு சுயூ-2 எனும் மேம்படுத்தப்பட்ட ராக்கெட் செப்டம்பர் 15ஆம் நாள் ஒரே நேரத்தில் 10செயற்கைகோள்களைச் சுமந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சீனாவின் அரசு சாரா ராக்கெட், செயற்கைக்கோள் இணையக் கூட்டமைப்பிற்கான ஒரு பெரிய அளவிலான தொகுதி வலையமைப்புப் பணியை செயல்படுத்துவது என்பது இதுவே முதல்முறை குறிப்பிடத்தக்கது.

திரவ ஆக்சிஜன் மற்றும் மீத்தேன் ஆகியவற்றை எரிபொருட்களாகப் பயன்படுத்தும் இந்த ராக்கெட், ஒரு நடுத்தர அளவிலான திரவ எரிபொருள் ஏவூர்தி ஆகும். அதிகபட்சமாக 6டன் சுமை தாங்கும் திறன் கொண்டதுடன், பல்வேறு வணிக செயற்கைக்கோள்களின் ஏவுதல் தேவைகளையும் இது பூர்த்தி செய்கிறது.

You May Also Like

More From Author