சீன ஊடகக் குழுமம், ஷாஆன்சி மாகாணத்தின் அரசு, ஃபுஜியான் மாகாணத்தின் அரசு ஆகியவை இணைந்து நடத்திய 13வது பட்டுப்பாதை சர்வதேச திரைப்பட விழா, செப்டம்பர் 19ஆம் நாள் ஷாஆன்சி மாகாணத்தின் சீஆன் நகரில் தொடங்கியது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பிரச்சாரத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹைசியோங் காணொளியின் மூலம் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில், பட்டுப்பாதை சர்வதேச திரைப்பட விழாவானது, சீன மற்றும் சர்வதேச திரைப்படத் துறையினர்களின் பரிமாற்றத்துக்கான விருந்தாகவும், பொதுமக்களின் கலாச்சார விழாவாகவும் மாறியுள்ளது என்றும், புதிய பட்டுப்பாதை கதைகள் மூலம் சீனக் கலாச்சாரத்தின் அழகை வெளிப்படுத்தவும், மனிதகுலத்திற்கான பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை ஊக்குவிப்பதில் பங்களிக்கவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள நண்பர்களுடன் இணைந்து பணியாற்ற சீன ஊடகக் குழுமம் விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.
இத்திரைப்பட விழாவின் தொடக்க விழா, ஏஐ, ஏஆர் உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஒளி நிழல் நிறைந்த அழகான அனுபவங்களை வழங்கி, கலாச்சார மற்றும் கால விழிப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளது.
