2026 உலக மாநகராட்சித் தலைவர்கள் உரையாடல் கூட்டம் 18ஆம் நாள், சீனாவின் ஹூபெய் மாநிலத்தின் வூகான் நகரில் நடைபெற்றது. 20க்கும் மேலான நாடுகளின் சுமார் 80 நகரங்களின் தலைவர்கள், பிரதிநிதிகளும், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர். நகர வளர்ச்சிக்கான பொதுத் தன்மை வாய்ந்த கருப்பொருட்களில் உரையாடல் நடத்தி, திறப்பு மற்றும் கூட்டு வெற்றி பெறும் நகரங்களின் வளர்ச்சிக்கான பாதைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
இதில் கலந்துகொண்டோர் தத்தமது நகரங்களுக்கு ஏற்ற வளர்ச்சி நடைமுறையாக்கத்தின்படி, மேலாண்மை அனுபவங்கள் மற்றும் வளர்ச்சிக் கண்ணோட்டத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
